Monday, September 29, 2014

தாய் பாசம்

உருவங்கள்
மாறிப் போயினும்
உணர்வுகள்
காட்டிக் கொடுத்து
விடுகிறது ..!!
ஒரு தாய்மையின்
முகவரியை ..!!

நன்றி: Saravanan Dhanapal

Sunday, September 28, 2014

தமிழ்த்தாய்

பொதிகை மலையில் பிறந்தாய் என்போம்
சிவனின் மகளாய் வளர்ந்தாய் என்போம்

உலகின் முதல்மொழி நீதான் என்போம்
தமிழரின் கருவிழி நீதான் என்போம்

தென்றலாய் தமிழகம் வீசினாய் என்போம்
பூமணம் எங்கும் பரப்பினாய் என்போம்

முகிலாய் காற்றில் கலந்தாய் என்போம்
துகிலாய் என்மாணம் காப்பாய் என்போம்

ஆபத்தில் கூட அம்மா என்போம்
அதுவும் கூட தமிழில்தான் அழைப்போம்

எழுதும் ஏட்டிலும் பேசும் பேச்சிலும்
எங்கும் என் அன்னை நீயே என்போம்

தாயை மறந்த மகனும்  இங்கில்லை
தாய்மொழியை மறந்த தமிழனும் நானில்லை ..
என்று உறக்கச்சொல்வோம் உலகிற்க்கு ...!!!!


 நன்றி: ப.வீரகுமார்
தமிழ்த்துறை இரண்டாம் ஆண்டு

அவள் பெயர்

முழுக்க முழுக்க
பழுத்த பழத்தில்

மின்னல் கீற்றாய்
விழுந்த வெடிப்பில்

பிதுங்கும் தேனை
வழித்து எடுத்து

நாக்கின் நடுவில்
தடவும் போது

ஊறும் சுவையே
அவள் பெயரை

அழுத்தி உச்சரிக்கயில்
என் சுவை
நரம்புக்குள் சுரக்கிறது .!!

நன்றி: குட்டி கிருஷ்ணா

பெற்றோர்

நாம் கேட்கும்
அன்பு கிடைக்கும் வரை
தேடுகிறோம்
புதுப்புது உறவுகளை ..!!!

ஆனால்
நாம் கேட்காமல்
அன்பு செலுத்தும்
உள்ளங்களை
தள்ளிவிடுகிறோம்
அனாதை இல்லங்களில் ...!!!

பிரிவு

அன்று
கண்ணீர் கூட
சுகமானது
எனக்காக
துடிக்க
நீ இருந்ததால்...!!!

இன்று
சிரிப்புக்கூட
துயரமானது
என்னோடு சேர்ந்து
சிரிக்க
நீ இல்லாததால்...!!!

நன்றி: ராம் துரை

Saturday, September 27, 2014

‪வாழ்க்கை‬

மேடு பள்ளங்கள்
நிறைந்ததே
வாழ்க்கை‬ ..

எதையும்
ஏற்றுக்கொள்ளும்
அளவிற்கு
மனதை வலிமையாக்கிக் 
கொள்ளுங்கள் ..!!!

நன்றி: அன்பு மகன் வெற்றி

கடைக் கண் பார்வை

யாரும் திறக்காத
என் இதயத்தை
திறந்து வைத்தது
உன் கடைக் கண் பார்வைதான்..!!!

கல்லாய் இருந்த
என் இதயம்
முதன் முறையாக
பூவாக மாறி தோற்றதும் 
உன்னிடம்தான்
பெண்ணே...!!!


நன்றி: விஜய் அன்பானவன்

செல்லக்குட்டி

உன் கூந்தல்
என் பூந்தோட்டம்

உன் பூவிழிகள்
என் பூலோகம்

உன் பொன்சிரிப்போ
என் பொக்கிஷம்

உன் பூவிதழ்கள்
என் செல்வம்

நீ எந்தன் செல்லக்குட்டி ..!!

நன்றி: Sathiyan Ips

என் தாய்க்கு

மாதம் பத்தாய்
எனை சுமந்து நின்றாய் ..

பாசத்தை பாலாக்கி
என் குருதிக்கு தந்தாய் ..

உன் இடுப்பில் எனை அமர்த்தி
என் தாய்தமிழை கற்றுதந்தாய்..

கற்றுக்கொண்டேன் என் தமிழை
பேசிவைத்தேன் என் மொழியை..

எத்தனை முறை மரணம் தழுவினாலும்
மகனாக பிறக்க வேண்டும் என் தாய்க்கு ..!!

அன்பு காதலி

ஒவ்வொரு நிமிடமும்
உன்னுடன் இருக்க தோனுதடி ..

கண்முன் திரியும்
ஓவியம் அவள் ..

கனவிலும் நீயே ..
அன்பே
கண் விழித்தால்
நினைவிலும் நியே ..

உன் நினைவுகளை
நான் மட்டும் சுமக்க வேண்டும்
என் கர்வத்துடன்
தள்ளி வைக்கிறேன் என் நிழலை ..

என் நண்பன்

உறவு இதுவென்றுதெரியாத போதும் ,
எல்லா உறவின் பெயரையும்
கூறி அழைப்பான்
என் நண்பன் !!

டேய் நண்பா
என்றால் போதும்
எமனையும் எனக்காக எதிர்ப்பான்
என் நண்பன் !!

இருளில் வராத நிழல் வேண்டாம் ..
இறுதி வரை வரும் நண்பன் போதும் ...