Sunday, September 11, 2016

நீ உருப்படவே மாட்ட..

ஒவ்வொரு ஆணின் வெற்றிக்கு பின்னாடியும் ஒரு பொண்ணு இருப்பான்னு சொல்ராங்க...

சரி...
பொண்ணுங்க வெற்றிக்கு பின்னாடி நாம இருக்கலாம்னு அவங்க பின்னாடியே சுத்துனா...

நீ உருப்படவே மாட்ட ன்னு சொல்ராங்க...

Sunday, September 4, 2016

மனைவியின் கோபம்

மனைவியின் கோபமே எந்த ரிக்டர் அளவுகோளாலும் அளக்க முடியா மோசமான இயற்கை சீற்றம்!

நன்றி : கோழியின் கிறுக்கல்

Thursday, January 22, 2015

விழிகளுக்குள் ....

விழிகளுக்குள்
நீ புரியும்
வித்தைகள் கண்டு
சிரிக்கிறேன்
உறக்கத்தில்...

விடிந்ததும்
உன் முகம் கண்டு
தலைகுனிகிறேன்
வெட்கத்தில்....

Saturday, November 15, 2014

பணம் !!

நாம் ஓடுகின்ற திசை

பார்க்கின்ற வேலை

பழகுற விதம்

இவையெல்லாம் வெவ்வேறாக

இருக்கலாம்!!! 

ஆனால் குறிக்கோள்

ஒன்றுதான்!!!

Yes for the only money!!!

பணம் !!

நன்றி: 

மோகன் முற்றிலும் மாறுபட்டவன்

Wednesday, October 8, 2014

சிகரம் தொடு

உழைக்கும் கரங்கள்
                     உன்னிடம் இருக்க
பார்க்கும் பார்வையில்
                    எதிரிகள் மிரல
தடைகள் என்றும்
                    உடைபட்டு கிடக்க
தமிழா நீயும் சிகரம் தொடு ..!!

அன்னை என்றும்
                  உன்பக்கம் தானே
அன்னைத் தமிழும்
                 உன்பக்கம் தானே
வேதங்கள் யாவும்
                 உன்பக்கம் தானே
வெள்வாய் நீயும் சிகரம் தொடு ..!!

மண்ணில் எங்கும்
                உன்புகழ் பரவ
மறைக்கும் கார்மேகம்
                மழையாக பொழிய
வசந்தங்கள் என்றும்
                 உன்வாழ்வில் வீச
தமிழா நீயும் சிகரம் தொடு ..!!

கதிர்பட்டு உருகும்
              பனியும் நீயில்லை
அலைப்பட்டு நகரும்
              நுரையும் நீயில்லை
வீர்கொண்டு எழுவும்
              வேங்கை நானென்று
மனிதா நீயும் சிகரம் தொடு ..!!

ப.வீரகுமார்
தமிழ்துறை இரண்டாமாடு

Thursday, October 2, 2014

நல்லவேளை அவர் அறியவில்லை!

அயல்நாட்டுப் பொருட்களை
வாங்காதீர்கள் என்று
வலியுறுத்தினார் மகாத்மா..!
இந்தியத் தயாரிப்பில் இந்தியனே
கலப்படம் செய்வான் என்பதை
நல்லவேளை அவர் அறியவில்லை!

அஹிம்சையாய் போராடுங்கள்
என்றார் மகாத்மா..!
ஏதுமறியா பெண்குழந்தைகள்
பாலியல் வன் கொடுமைக்கு
ஆளாகும்போது அஹிம்சை
பயன்படாது என்பதை
நல்லவேளை அவர் அறியவில்லை!

மேலாடை இல்லாமல்
மேலைநாடுகளிலும் வலம்
வந்தவர் மகாத்மா..!
இன்று பதவியில் அமர்ந்ததும்
பக்கத்துத் தெருவிற்கு கூட
டாடா சுமோக்கள் புடை சூழ
செல்லும் அரசியல்வாதியை
நல்லவேளை அவர் அறியவில்லை!

விரோதியையும் நேசி
என்றார் மகாத்மா..!
இன்று பதவிக்கு வருவதே பழி
வாங்குவதற்காகத் தான் என்பதை
நல்லவேளை அவர் அறியவில்லை!

நாம் அவரின் காலத்தில்
வாழவில்லை..!
அவரின் சுயசரிதையை
படிக்கவில்லை..!
அக்டோபர் 2ஐ விடுமுறைக்காக
மட்டுமே கொண்டாடுகிறோம்..!


‪#‎மகாத்மா‬..! உங்கள் காலம்
காலமாகி நெடுங்காலம்
ஆகிவிட்டது..!

நன்றி: Tamil muhil

உறங்க இயலவில்லை

இரவில் உன்னால்
உறங்க
இயலவில்லை
என்றால்,
யாரோ ஒருவரின்
கனவில்
விழித்துக் கொண்டிருக்கிறாய்
என்று அர்த்தம்..!

இனிய
இரவு வணக்கம் .!!

நன்றி: Tamil muhil