அயல்நாட்டுப் பொருட்களை
வாங்காதீர்கள் என்று
வலியுறுத்தினார் மகாத்மா..!
இந்தியத் தயாரிப்பில் இந்தியனே
கலப்படம் செய்வான் என்பதை
நல்லவேளை அவர் அறியவில்லை!
அஹிம்சையாய் போராடுங்கள்
என்றார் மகாத்மா..!
ஏதுமறியா பெண்குழந்தைகள்
பாலியல் வன் கொடுமைக்கு
ஆளாகும்போது அஹிம்சை
பயன்படாது என்பதை
நல்லவேளை அவர் அறியவில்லை!
மேலாடை இல்லாமல்
மேலைநாடுகளிலும் வலம்
வந்தவர் மகாத்மா..!
இன்று பதவியில் அமர்ந்ததும்
பக்கத்துத் தெருவிற்கு கூட
டாடா சுமோக்கள் புடை சூழ
செல்லும் அரசியல்வாதியை
நல்லவேளை அவர் அறியவில்லை!
விரோதியையும் நேசி
என்றார் மகாத்மா..!
இன்று பதவிக்கு வருவதே பழி
வாங்குவதற்காகத் தான் என்பதை
நல்லவேளை அவர் அறியவில்லை!
நாம் அவரின் காலத்தில்
வாழவில்லை..!
அவரின் சுயசரிதையை
படிக்கவில்லை..!
அக்டோபர் 2ஐ விடுமுறைக்காக
மட்டுமே கொண்டாடுகிறோம்..!
#மகாத்மா..! உங்கள் காலம்
காலமாகி நெடுங்காலம்
ஆகிவிட்டது..!
வாங்காதீர்கள் என்று
வலியுறுத்தினார் மகாத்மா..!
இந்தியத் தயாரிப்பில் இந்தியனே
கலப்படம் செய்வான் என்பதை
நல்லவேளை அவர் அறியவில்லை!
அஹிம்சையாய் போராடுங்கள்
என்றார் மகாத்மா..!
ஏதுமறியா பெண்குழந்தைகள்
பாலியல் வன் கொடுமைக்கு
ஆளாகும்போது அஹிம்சை
பயன்படாது என்பதை
நல்லவேளை அவர் அறியவில்லை!
மேலாடை இல்லாமல்
மேலைநாடுகளிலும் வலம்
வந்தவர் மகாத்மா..!
இன்று பதவியில் அமர்ந்ததும்
பக்கத்துத் தெருவிற்கு கூட
டாடா சுமோக்கள் புடை சூழ
செல்லும் அரசியல்வாதியை
நல்லவேளை அவர் அறியவில்லை!
விரோதியையும் நேசி
என்றார் மகாத்மா..!
இன்று பதவிக்கு வருவதே பழி
வாங்குவதற்காகத் தான் என்பதை
நல்லவேளை அவர் அறியவில்லை!
நாம் அவரின் காலத்தில்
வாழவில்லை..!
அவரின் சுயசரிதையை
படிக்கவில்லை..!
அக்டோபர் 2ஐ விடுமுறைக்காக
மட்டுமே கொண்டாடுகிறோம்..!
#மகாத்மா..! உங்கள் காலம்
காலமாகி நெடுங்காலம்
ஆகிவிட்டது..!
நன்றி: Tamil muhil
0 Comment to "நல்லவேளை அவர் அறியவில்லை!"
Post a Comment